ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முடிவு

Sep 11 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிடும் திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து ஆயுதப்படைகளின் போர்த்திறனை மேம்படுத்தும் வகையில், அவற்றை நவீனப்படுத்துவதற்கு விரிவான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. பல வகையான ஆயுதங்கள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள், கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வது இத்திட்த்தில் அடங்கும். தரைப்படைக்‍கு 2 ஆயிரத்து 600 போர் விமானங்கள் கொள்முதல், விமானப்படைக்‍கு 110 அதிநவீன ​போர் விமானங்கள் கொள்முதல் என ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00