போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டும் - மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்

Aug 22 2019 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஒன்றாம் தேதி முதல், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் தீவிரமாக கடைபிடிக்‍கப்படும் என்றும், மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். போக்குவரத்து சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் அத்துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிக்க, அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்கள் மாநிலங்கள் தோறும் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வாகன விபத்துகளில் பலியாவதாகவும், மோட்டார் வாகன திருத்தச் சட்டம், விபத்துகளை குறைக்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி அபராதம் செலுத்த வேண்டும் என்று திரு.நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00