வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அரசு எச்சரிக்‍கை

Aug 22 2019 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெங்காயத்தை பதுக்‍கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வெங்காய விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபத்திற்காக குறுக்‍கு வழிகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்தும் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00