ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில் கைதான ப.சிதம்பரத்திற்கு திங்கட்கிழமை வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Aug 22 2019 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ். மீடியா பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தை, வரும் திங்கட்கிழமை வரை சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்‍கில், ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுக்‍களை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் சார்பில், உச்ச​நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு ஜாமின் மனு நாளை விசாரிக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் உள்ள சிதம்பரம் இல்லத்தில் வைத்து, அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், சி.பி.ஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு சிதம்பரத்தின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, பின்னர் விசாரணை நடத்தப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திரு.ப.சிதம்பரத்தை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்‍க சிபிஐ அனுமது கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சுமார் ஒன்றரை மணிநேரம் தீர்ப்பு வழங்குவதை தாமதப்படுத்தினார். இதனையடுத்து, மாலை 6.45 மணியளவில், சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று, வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும், சிதம்பரத்தின் குடும்பத்தினர் நாள்தோறும் அரை மணிநேரம் அவரை சந்திக்கவும் அனுமதி வழங்கினார். நீதிமன்ற உத்தரவை அடுத்து ப. சிதம்பரம், சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00