கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தஞ்சம்

Aug 18 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கி, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளப்பெருக்குகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்து வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளா கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் நிலச்சரிவுகளில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00