ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை இயல்பு நிலைக்‍கு கொண்டுவர நடவடிக்‍கை - 2ஜி சேவை மீண்டும் தொடக்‍கம்

Aug 17 2019 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்ஃபோன்களுக்கான 2ஜி சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்‍கையாக, ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புக்‍கு குவிக்‍கப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்‍கப்பட்டன. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஜம்மு-காஷ்மீரில் ஒருசில இடங்களில் நடந்த சிறு அசம்பாவிதங்களைத் தவிர, பெரும்பாலும் அமைதி நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, முடக்கி வைக்கப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகளையும், செல்ஃபோன் சேவைகளையும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தவார இறுதிக்குள் பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்ஃபோன்களுக்கான 2ஜி சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00