ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு சட்டம் 370 ரத்தானதால் கடந்த 10 நாட்களில் எந்தத் தாக்‍குதலும் நடைபெறவில்லை - அம்மாநில தலைமைச் செயலாளர் பேட்டி

Aug 16 2019 8:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து, கடந்த 10 நாட்களில் எந்தத் தாக்‍குதலும் நடக்‍கவில்லை என்றும், ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை என்றும் அம்மாநில அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் தலைமைச் செயலாளர் திரு. பி.வி.ஆர். சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியபோது, வெள்ளிக்‍கிழமையான இன்று மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவதாக தெரிவித்தார். பள்ளிக்‍கூடங்கள் அடுத்தவாரம் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டதாகவும், கடந்த 10 நாட்களில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்களின் அரசு நிர்வாகம் இயல்பாக நடைபெறுவதாகவும், இதில், 5 மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00