மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரின் மீது காகிதம் வீசிய பெண் - அமைச்சரின் கவனத்தை ஈர்க்க, மனுவை காரின் மீது வீசியதால் பரபரப்பு
Aug 13 2019 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் மீது, பெண் ஒருவர் காகிதத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்தது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது அவரின் காரின் மீது, பெண் ஒருவர் காகிதம் ஒன்றை வீசியுள்ளார். உடனடியாக காரை நிறுத்தி காகிதத்தை எடுத்து பார்த்தபோது, அது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கை மனு என்பது தெரியவந்தது. பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுத்து வீடு கட்டிக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். மத்திய அமைச்சரின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை மனுவை காரின் மீது வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.