பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா - வேண்டுமென்றே கேரளாவை புறக்கணித்ததாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

Aug 13 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, வேண்டுமென்றே கேரளாவை புறக்கணித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளப் பேரழிவில் சிக்கியுள்ள மாநிலங்களின் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என திரு. சீதாராம் யெச்சூரி வலியுறுத்திள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வுடன் தொடர்புடைய சில அமைப்புகள், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டாமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், அது மிகவும் கண்டனத்துக்‍குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்‍கு மட்டுமே சென்றதாகவும், மிக மோசமாக பாதிக்‍கப்பட்டுள்ள கேரளாவை வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இயற்கை பேரழிவு நேரங்களில் அரசியல் பாரபட்சத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00