தமிழகத்திற்கு காவிரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்தது - விநாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து
Aug 13 2019 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் மழை குறைந்துள்ளதை அடுத்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துவருகிறது.
கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீர் படிப்படியாக அதிகரித்து 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடியை எட்டியது. இதனிடையே, மழைப்பொழிவு குறைந்ததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்தது. பிலிகுண்டுலுவில் காலையில் வினாடிக்கு 1 லட்சத்து 95 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது கனிசமாக குறைந்து, 85 ஆயிரம் கன அடியாக உள்ளது.