கேரளாவில் மழை வெள்ள பாதிப்புகளால் கடந்த 5 நாட்களில் 83 பேர் பலி - எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Aug 13 2019 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 83 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு, கோழிக்‍கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலப்புரத்தில் 10 ஏக்கர் நிலப்பகுதி முற்றிலுமாக புதைந்து மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்டன. சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வெள்ளத்தில் சிக்‍கி இதுவரை 83 உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மலப்புரத்தில் 27 பேரும், கோழிக்கோட்டில் 17 பேரும், வயநாட்டில் 12 பேரும் உயிரிழந்தனர். 58 பேர் மாயமாகினர். கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழகம் அனைத்து தேர்வுகளையும் ஆகஸ்டு 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றபோதும், கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00