மத்திய அரசு போதிய நிதி ஒதுக்‍காததால் சி.பி.எஸ்.இ பள்ளித் தேர்வுக்‍ கட்டணங்கள் உயர்வு - மத்திய இடைநிலைக்‍ கல்வி வாரியம் விளக்‍கம்

Aug 12 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை சி.பி.எஸ்.இ.யிடமிருந்து தேசிய தேர்வு ஆணையத்திற்கு மாற்றியதோடு, பள்ளித்தேர்வுகளை நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்காததால் பள்ளித் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளுக்கான கட்டணத்தை திடீரென உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. பட்டியலின மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 24 மடங்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக்‍ கட்டணம் 2 மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 5 பாடங்களுக்கு இதுவரை 50 ரூபாய் செலுத்தி வந்த பட்டியலின மாணவர்கள் இனி, ஆயிரத்து 200 ரூபாய் செலுத்த வேண்டும். இதேபோல், 5 பாடங்களுக்கு 750 ரூபாய் செலுத்திய பொதுப்பிரிவு மாணவர்கள், இனி ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த கட்டண உயர்வு குறித்து விளக்கமளித்துள்ள சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாகச் செலவுகளை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்பு, நீட், JEEE போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை சி.பி.எஸ்.இ.யே நடத்தி வந்ததால் கிடைத்த வருவாய் மூலம் நிர்வாகக் செலவை நிர்வகித்து வந்ததாக தெரிவித்த அவர், தற்போது இந்த தேர்வுகள் அனைத்தையும் மத்திய அரசு தேசிய தேர்வு ஆணையத்திற்கு மாற்றியதால், தேர்வுச்செலவு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை நிர்வகிக்க இயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பள்ளித்தேர்வுகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எதன் அடிப்படையில் பொதுப்பிரிவு மாணவர்களின் கட்டணம் 2 மடங்காகவும், பட்டியலின மாணவர்களின் கட்டணம் 24 மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவிக்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00