நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படும் என தகவல் : முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

Jul 24 2019 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 26-ம் தேதி முடிவடைவதாக இருந்தது. ஆனால், பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால், கூட்டத்தொடரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த யோசனைக்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், ஒரு வாரம் முதல் 10 பணி நாட்கள் வரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்படலாம் என்று பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த யோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோ‌ஷி, கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து முடிவு எடுக்கும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00