புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன், நெக்ஸ்ட், மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு : புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Jul 23 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன், நெக்ஸ்ட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கை திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. பேரவையில் பேசிய முதலமைச்சர் திரு.நாராயணசாமி, சந்திரயான் - 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், நெக்ஸ்ட் தேர்வு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாவிற்கும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த சிவா, காங்கிரஸ் கொள்கையை நம்பி தி.மு.க. இல்லை எனவும், தி.மு.க.விற்கு என தனிக்கொள்கையுண்டு எனவும் பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00