ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்‍கள் 3 பேர் இடைநீக்‍கம் - அவையில் பாதிப்பு ஏற்படுத்தியதாகக்‍ கூறி நடவடிக்‍கை

Jul 24 2019 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்‍கள் 3 பேர் இடைநீக்‍கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது இவ்விரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்துவரும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று அமலில் ஈடுபட்டதாகக்‍ கூறி தெலுங்குதேசக்‍ கட்சியின் அச்சன் நாயுடு, கொரன்ட்ல புச்சய்யா, ராமன் நாயுடு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்‍கள் இடைநீக்‍கம் செய்யப்பட்டனர். சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர நாத் பரிந்துரைப்படி இந்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தெலுங்குதேசக்‍ கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்‍களும் பா.ஜ.க.வில் சேருவதற்கு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதால் தெலுங்குதேசத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்‍கு மேலும் நெருக்‍கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலுங்குதேசக்‍ கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் பா.ஜ.க.வில் இணைந்திருப்பதால் அக்‍கட்சி எதிர்காலம் பெரும் கேள்விக்‍குறியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00