ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக சபாநாயகர் நோட்டீஸ் - இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு - அமைச்சராகும் கனவில் யாரும் இருக்‍க வேண்டாம் என அமைச்சர் சிவக்‍குமார் எச்சரிக்‍கை

Jul 23 2019 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்‍கம் செய்யப்பட்டால் அவர்கள் உறுப்பினர்களாகவே இருக்‍க முடியாது என்றும், அதனால் அமைச்சராகும் கனவில் இருக்‍க வேண்டாம் என்றும், அம்மாநில அமைச்சர் திரு.சிவக்‍குமார் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்கு தன்னை சந்தித்து, ராஜினாமா பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் திரு.ரமேஷ்குமார் புதிய சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் திரு. சிவக்‍குமார், ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை சுட்டிக்‍காட்டியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்‍கம் செய்யப்பட்டால் அவர்கள் உறுப்பினர்களாகவே இருக்‍க முடியாது என்றும், அதனால் அமைச்சராகும் கனவில் இருக்‍க வேண்டாம் என்றும், பகிரங்க எச்சரிக்‍கை விடுத்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் உறுப்பினராக முடியாது என்றும் திரு. சிவக்‍குமார் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00