நம்பிக்‍கைக்‍கோரும் தீர்மானத்தின்மீது விவாதம் தொடர்வதால் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

Jul 19 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது, இன்னும் 20 உறுப்பினர்கள் பேச வேண்டி உள்ளதால், இன்று நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்‍கு ஆதரவு அளித்து வந்த 16 எம்.எல்.ஏக்‍கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, முதலமைச்சர் குமாரசாமி அரசு மீது நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்த, பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். இதையடுத்து, நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. குமாரசாமி நேற்று சட்டப்பேரவையில் தாக்‍கல் செய்தார். தீர்மானத்தின் மீது 2-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 உறுப்பினர்கள் பேசவேண்டி உள்ளது. எனவே, நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்றும், விவாதம் திங்கட்கிழமை வரை நீடிக்‍க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. சித்தராமையா கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00