5 ஏக்‍கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே வங்கிக்‍கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அமைச்சரவையை கூட்டி எடுக்‍கப்பட்ட முடிவா? - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி

Jul 19 2019 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்‍கு மட்டுமே பயிர்க்‍ கடன் தள்ளுபடி செய்யும் என்ற முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்‍ கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்‍கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பானுமதி தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயிர்க்‍ கடன் தள்ளுபடி என தமிழக அரசு எப்படி முடிவு எடுத்தது? - இதுதொடர்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதா? - என்ன காரணத்திற்காக அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை? என்று அடுக்‍கடுக்‍கான கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00