மரண தண்டனையை நிறுத்திவைக்‍க தீர்ப்பளிக்‍கப்பட்டுள்ளதால் குல்பூஷண்ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தானுக்‍கு இந்தியா வலியுறுத்தல்

Jul 18 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்‍க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், தாமாக முன்வந்து நாடாளுமன்றத்தில் விளக்‍கம் அளித்தார். இந்தியா மற்றும் ஜாதவின் நிலைப்பாடுகளை மட்டும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்த அவர், சர்வதேச சட்டத்தின் இறையாண்மையை மதிப்பவர்களின் உணர்வுகளை, தீர்ப்பு பிரதிபலிப்பதாகக்‍ கூறினார். தீர்ப்பை இந்தியா வரவேற்பதாகவும், ஜாதவை, பாகிஸ்தான் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். குல்பூஷன் ஜாதவை, பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00