உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு - 2 தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியீடு

Jul 19 2019 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 2 தீர்ப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எப்போதும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்படும். இவற்றை முதல்முறையாக பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்புகள் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவது, வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்ப்பை தங்கள் மொழியில் புரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்றும், வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தீர்ப்பின் ஆங்கிலப் பதிப்பையே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00