சட்டப்பேரவையில் மற்றவர்களின் அவசரத்திற்காக நம்பிக்கை வாக்‍கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது - எப்போது நடத்தவேண்டும் என்பதை முடிவு செய்வது தனது உரிமை என சபாநாயகர் திட்டவட்டம்

Jul 18 2019 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மற்றவர்களின் அவசரத்திற்காக நம்பிக்கை வாக்‍கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது என்றும், எப்போது நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது தனது உரிமை என்றும் கர்நாடக சபாநாயகர் திரு. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உச்சக்‍கட்ட அரசியல் நெருக்‍கடிக்‍கு இடையே, கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை சுமார் 11 மணிக்‍கு கூடியது. நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்‍கல் செய்தார். தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிவடைந்த உடன், இன்றே நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்த வேண்டும் என கர்நாடக பா.ஜ.க. தலைவர் திரு. எடியூரப்பா வலியுறுத்தினார். ஆனால், நம்பிக்‍கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த நிர்பந்திக்‍கக்‍ கூடாது என்றும், எப்போது நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது தனது உரிமை என்றும் சபாநாயகர் திரு. ரமேஷ் கூறினார். இதனிடையே, முதலமைச்சர் குமாரசாமி அரசுக்‍கு ஆதரவாக 100 எம்.எல்.ஏக்‍களும், பா.ஜ.க.வுக்‍கு ஆதரவாக 107 எம்.எல்.ஏக்‍களும் கர்நாடக சட்டப்பேரவையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்‍க 105 எம்.எல்.ஏக்‍கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்‍கது. நம்பிக்‍கை வாக்‍கெடுப்பையொட்டி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00