கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு - அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாக தகவல்

Jul 8 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில், முதலமைச்சர் குமாராசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கர்நாடகாவில், ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் திரு. ரமேஷ்குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இது குறித்து நாளை முடிவு செய்ய உள்ளதாக சபாநாயகர் கூறி உள்ளதால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை, குமாரசாமி அரசுக்‍கு ஆதரவு அளித்துவந்த அமைச்சர் திரு. நாகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏவான இவருக்‍கு, கடந்த மாதம், அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மும்பைக்‍கு சென்றுள்ளார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதால், கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வசதியாகவே, கர்நாடக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00