பீகாரில் மூளைக்‍காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு - காய்ச்சல் அறிகுறியுடன் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

Jun 20 2019 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் மாநிலத்தில் மூளைக்‍காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் 11 பேர் வரை இந்நோய் தாக்‍குதலால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 41-ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. சாபர்பூர் பகுதியில் Acute Encephalitis Syndrome மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் Japan Encephalitis மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளது. நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00