பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் - பகுஜன், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Jun 19 2019 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆலோசனை நடத்த, டெல்லியில், பிரதமர் திரு. மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட 8 கட்சிகள் புறக்கணித்தன.

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்‍கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதும், இது குறித்து ஆலோசிக்‍க, இன்று, பிரதமர் திரு. மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில், அனைத்துக்‍கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

ஆனால், இடதுசாரிகளும், பீகார் முதலமைச்சர் திரு. நிதீஷ்குமார், ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் திரு. பரூக் அப்துல்லா, திருமதி. மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00