கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்‍கில் காவல் அதிகாரி உள்ளிட்ட மூவருக்‍கு ஆயுள் - 3 பேருக்‍கு 5 ஆண்டு சிறை - பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு

Jun 10 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கிராமத் தலைவர் உள்ளிட்ட 3 பேருக்‍கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கதுவா மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், கிராமத்தலைவர் சாஞ்சிராம், அவரது மகன் விஷால், காவல் துணை ஆய்வாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில், பா.ஜ.க. அமைச்சர்கள் இருவர் பங்கேற்றதால், வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை, பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கிராமத்தலைவர் சாஞ்சிராம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த பதான்கோட் நீதிமன்றம், தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் அதிகாரி தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், கிராமத்தலைவர் சாஞ்சிராம் ஆகிய 3 பேருக்‍கு ஆயுள் தண்டனையும், எஞ்சிய 3 பேருக்‍கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. சாஞ்சி ராமின் மகன் விஷாலுக்கு 18 வயது வயது நிரம்பாத நிலையில், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00