தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் - வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முயற்சி நடைபெறுவதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

May 21 2019 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும், அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லு-முல்லு செய்யும் முயற்சி என்றும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில், 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல், நேற்று மாலையுடன் நிறைவடைந்தன இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் நேற்று மாலை வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பா.ஜ.க. கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும், அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உறுதியோடும், தைரியமாகவும், ஒற்றுமையாகவும் எதிர்த்துப் போராடி இந்த போர்க்களத்தில் நாம் வென்றாக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் செல்வி மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00