நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்‍கு அளிக்‍க முடியாது - தமிழகத்தின் கோரிக்‍கையை நிராகரிக்‍கும் வகையில் மத்திய அரசு கருத்து

May 10 2019 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்‍கு விலக்‍கு அளிக்‍க வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்‍கு பேட்டி அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிவித்தார். எனவே, நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது என்றும் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00