சபரிமலைக்‍கு செல்லவிடாமல் கேரள அரசு பக்‍தர்களை தடுப்பதாக எழுந்த புகார் - பிரதமர் மோடி பொய் பேசுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

Apr 15 2019 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் திரு. மோடி இரட்டை வேடம் போடுவதாகவும், சபரிமலையை கலவர பூமியாக்‍க பா.ஜ.க. திட்டமிட்டதாகவும், கேரள முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, அங்கு ஏற்பட்ட பதற்றத்தை தணிக்‍க, 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பா.ஜ.க.தான் கூறியதாக திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலையை கலவர பூமியாக்‍க மத்திய மோடி​அரசு திட்டமிட்டதாகவும், கடும் நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி தடுக்‍கப்பட்டதாகவும் பினராயி குறிப்பிட்டார்.

சபரிமலையை பாதுகாக்கவேண்டும் என்பதுதான் கேரள அரசின் கொள்கை என தெரிவித்த அவர், கேரளா வந்தபோது சபரிமலை குறித்து பேசாத பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் மங்களூரில் பேசும்போது சபரிமலையையும், ஐயப்பனையும் குறிப்பிட்டு பேசியதாக குற்றம் சாட்டினார். கேரளாவில் சபரிமலை என்று பேசினாலே அம்மாநில அரசு கைது செய்கிறது என்று பொய் குற்றச்சாட்டை மோடி கூறியதாகவும், இது கேரளாவை அவமானப்படுத்தும் செயல் என்றும், பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00