ராணுவத்தினரின் சேவையை அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும் - முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசுத் தலைவருக்‍கு கடிதம்

Apr 12 2019 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணுவத்தினரின் சேவையை அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்‍கு 150-க்‍கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதையும், தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக புகார் தெரிவித்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 66 பேர் கையெழுதிட்டு கடந்த வாரம், குடியரசுத் தலைவருக்‍கு புகார் கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், மக்‍களவை தேர்தலையொட்டி, அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் ராணுவத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என, முன்னாள் ராணுவ தளபதிகள் 6 பேர் உள்பட 150க்‍கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்‍கு கடிதம் எழுதி உள்ளனர்.

குறிப்பாக ராணுவ படைகளை, மோடியின் சேனை என குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சி தொண்டர்கள் ராணுவ சீருடைகளை அணிந்திருப்பது போன்று புகைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00