மக்‍களவை தேர்தலுக்‍கான தேதியை அறிவிக்‍க போதுமான கால அவகாசம் உள்ளது - தேர்தல் ஆணையம் விளக்‍கம்

Mar 7 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவை தேர்தல் தேதியை அறிவிக்‍க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக எதிர்க்‍கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின்போது மார்ச் முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இம்முறையும், அதே காலகட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்‍கப்படாததால், பிரதமர் திரு. மோடிக்கு சாதகமாகவே தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்‍கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் எதிர்க்‍கட்சிகள் சாடியுள்ளன.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இன்னும் உள்ளதாகவும், திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது. இவ்விகாரத்தில் பிரதமரின் விருப்பப்படி தாங்கள் செயல்படவில்லை என்றும், சொந்த திட்டப்படிதான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00