ரஃபேல் விமான ஊழல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த தகுந்த ஆதாரங்கள் உள்ளன - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு தகவல்

Mar 7 2019 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் திரு. மோடியிடம் விசாரணை நடத்த தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்‍கிய ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், அது ஊடகங்களில் வெளியானதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்தார். ஆவணங்களை கசியவிட்டவர்கள் அரசு அலுவலக ரகசிய சட்டத்தின்படி குற்றவாளிகள் என்றும் வாதிட்டார். ஆவணங்கள் கசியவிடப்பட்டாலும் அதில் உண்மைதன்னை உள்ளதா என்பதைத்தான் நாம் பார்க்‍க வேண்டும் என உச்சசீதிமன்றம் தெரிவித்தது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல் காந்தி, ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், அதில் உண்மைகள் உள்ளதாக குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது தெளிவாக உள்ளதால், பிரதமர் திரு. மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என குற்றம்சாட்டிய ராகுல், ரஃபேல் ஆவணங்களை போல நாட்டில் வேலைவாய்ப்பும் மாயமாகியுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00