அயோத்தி நிலப்பிரச்னைக்‍குத் தீர்வுகாண நடுநிலையாளர்கள் குழு அமைக்‍கப்பட வேண்டும் -உச்சநீதிமன்றம் கருத்து

Mar 6 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அயோத்தி நிலப்பிரச்னைக்‍குத் தீர்வுகாண ஒரு நடுநிலையாளர் என்றில்லாமல் நடுநிலையாளர்கள் குழு அமைக்‍கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்‍கில், சர்ச்சைக்‍குரிய நிலத்தை 3 பகுதிகளாகப் பிரிக்‍க வேண்டும் என, அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன.

இதனிடையே, அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய இரண்டு புள்ளி ஏழு ஏழு ஏக்‍கர் நிலத்தை தவிர்த்து, அதைச்சுற்றி கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்‍கர் நிலத்தை, அதன் உரிமைக்‍குரிய ராமஜென்மபூமி நிவாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தது.

இந்நிலையில், அயோத்தி தொடர்பான வழக்‍குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்‍கு வந்தன. அப்போது, அயோத்தி விவகாரத்தை நிலப்பிரச்னையாக பார்க்கவில்லை என்று தெரிவித்த நீதிபதி திரு. பாப்தே, மதம், உணர்வு, நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்ப்பதாக கூறினார். பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்கள் குழு அமைக்‍கப்படும் வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00