இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவினாலும், திட்டமிட்டபடி மக்‍களவை தேர்தல் நடைபெறும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி

Mar 1 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் இருந்தாலும், திட்டமிட்டபடி மக்‍களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரச்சாரங்களில் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்‍குதலை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்‍களவைத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறுமா என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோராவிடம், மக்‍களவை தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திட்டமிட்டபடி மக்‍களவை தேர்தல் நடைபெறும் என கூறினார். எல்லையில் பதற்றம் இருந்தாலும், அது எந்த வகையிலும் நாடாளுமன்றத் தேர்தலை பாதிக்‍காது எனத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00