பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்‍குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உண்மைத் தகவல்களை தெரிவிக்‍க வேண்டும் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

Mar 1 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரில், தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்‍குதலின் உண்மை நிலையை மத்திய அரசு நாட்டு மக்‍களுக்‍கு தெரியபடுத்த வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த 26ம் தேதி இந்திய விமானப் படை நடத்திய வான்வழி தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பன்னாட்டு ஊடகங்களில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த செல்வி மம்தா, இந்த தாக்‍குதலுக்‍கு பிறகு, பிரதமர் திரு. மோடி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தீவிரவாத முகாம்கள் மீதான தாக்‍குதலில், பன்னாட்டு ஊடகங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று செய்திகள் வருவதை சுட்டிக்‍காட்டிய மம்தா, எது உண்மை என்பதை மோடி அரசு நாட்டு மக்‍களுக்‍கு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு படைக்கு தோள் கொடுக்க எதிர்கட்சிகள் தயாராக உள்ளதாகவும், ஆனால், அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக போர் நடத்தக்கூடாது என்றும் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00