புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ் : துணை நிலை ஆளுநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்‍கு பின்னர் அறிவிப்பு

Feb 19 2019 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, கடந்த 6 நாட்களாக நடத்திய தர்ணா போராட்டம், துணை நிலை ஆளுநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்‍கு பின்னர் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் திரு .நாராயணசாமி கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி திரு. நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் சுமார் நான்கரை மணி நேரம் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திரு. நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பரிசிலனை செய்ய உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00