ஆந்திராவுக்‍கு வருகை தரும் பிரதமர் மோடிக்‍கு எதிராக போராட்டம் - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Feb 8 2019 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலத்திற்கு நாளை மறுநாள் வருகை தரவிருக்‍கும் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்‍கு எதிராக, போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய திரு.சந்திரபாபு நாயுடு, நாளை மறுநாள் ஆந்திராவுக்‍கு வருகை தரவுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு எதிராக பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தப் போராட்டத்தை தொண்டர்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் 11-ந்தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், தேசிய கட்சி தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் திரு.சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00