இரட்டை இலை வழக்‍கு 4 வாரங்களுக்‍குள் முடியாவிட்டால், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்திற்கு குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Feb 8 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரட்டை இலை வழக்‍கை டெல்லி நீதிமன்றம் 4 வாரங்களுக்‍குள் முடிக்‍கவில்லையென்றால், அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்திற்கு குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்‍கப்படும் சூழல் உள்ளதாலும், மக்‍களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், தேர்தல்களில் போட்டியிட ஏதுவாக குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍குமாறு கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கின் விசாரணை கடந்த மாதம் 24ம் தேதி முடிவடைந்தது. நீதிபதி திரு.ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை வழக்‍கை 4 வாரங்களுக்‍குள் முடிக்‍க வேண்டும் என்றும், இல்லையென்றால், கடந்த மார்ச் மாதம் அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க உத்தரவிட்ட தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00