மம்தா பானர்ஜியின் கொல்கத்தா பொதுக்‍கூட்டத்தை புறக்‍கணிக்‍க தெலங்கானா முதலமைச்சர் திட்டமிட்டிருப்பதாக தகவல் - காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியின் முயற்சிக்‍கு முட்டுக்‍கட்டை

Jan 11 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருக்‍கும் பொதுக்‍கூட்டத்தை புறக்‍கணிக்‍க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்‍கு மாற்றாக புதிய அணி அமைக்‍கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். அதற்கு எதிராக அவரது அரசியல் எதிரியான தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். தலைவருமான திரு. சந்திரசேகர ராவும் தனி அணி ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக ஏற்கெனவே மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசியிருக்‍கும் நிலையில், தற்போது மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி மம்தா தலைமையில் பொதுக்‍கூட்டம் நடைறெ உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி, திரு. சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருக்‍கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ராகுல்காந்தி இந்தக்‍ கூட்டத்தில் பங்கேற்பதால், அவருக்‍கு எதிராக செயல்படும் திரு. சந்திரசேகர ராவ் இந்தக்‍ கூட்டத்தை புறக்‍கணிக்‍க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00