சி.பி.ஐ. இயக்‍குநராக மீண்டும் பொறுப்பேற்றார் அலோக்‍வர்மா - உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பணிகளை தொடங்கினார்

Jan 9 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சிபிஐ இயக்குநராக திரு.அலோக் வர்மா இன்று பொறுப்பேற்றார்.

சி.பி.ஐ. இயக்குநர் திரு.அலோக் வர்மா பதவி தொடர்பாக, அக்டோபர் 23 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, அலோக் வர்மா முக்கிய முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும், அவரது கோரிக்கை தொடர்பாக உயர்மட்டக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. திரு.அலோக் வர்மாவை நீக்கும் முடிவை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு முடிவுக்கு விட்டிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சிபிஐ இயக்குநராக திரு.அலோக் வர்மா இன்று சிபிஐ அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து பணிகளையும் அவர் மேற்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00