மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் வேலை நிறுத்தம் : பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி - பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - போலீசார் குவிப்பு

Jan 8 2019 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

மத்திய அரசு, தொழிலாளர் விரோத போக்‍கை கடைபிடிப்பதாக கூறி நடைபெற்று வரும் போராட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

அங்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் ஒருசில போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பேருந்து ஒன்று புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற போது நைனார் மண்டபம் அருகே பேருந்து மீது கல் வீசி தாக்கப்பட்டது. இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00