கேரளாவில் ஒருபோதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை அனுமதிக்‍க முடியாது - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க.வினரின் தொடர் போராட்டத்தால், பொதுமக்‍களுக்‍கு பெரும் பாதிப்பு என முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

Jan 3 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் ஒருபோதும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை அனுமதிக்‍க முடியாது என அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்ததுள்ளார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு. பினராயி விஜயன், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டிய கடமை அரசுக்‍கு உண்டு என்றும், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்‍கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறினார். நேற்று, 2 பெண்கள் சன்னிதானம் சென்றபோது ஐயப்ப பக்தர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்று தெரிவித்த அவர், சபரிமலை விவகாரம் தொடர்பாக, கடந்த 3 மாதங்களில் 7 முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இன்று நடைபெற்றுவரும் போராட்டத்தில் 80 பேருந்துகளும், 7 காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏராளமான பெண்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வன்முறையில் ஈடுபடுவபர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் அவர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00