மத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்

Dec 12 2018 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் திரு. கமல்நாத், அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்.

மத்திப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்‍க 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 2 உறுப்பினர்களைக்‍ கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்தில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசுக்‍கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆட்சி அமைக்‍குமாறு காங்கிரஸ் கட்சிக்‍கு, அம்மாநில ஆளுநர் திருமதி ஆனந்தி பென் அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கமல்நாத், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமைகோரினார்.

ராஜஸ்தானில் முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார் என புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்‍கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00