தெலங்கானாவில் ஆட்சியை தக்‍கவைத்துக் கொள்கிறது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றி

Dec 11 2018 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி முன்னிலை வகித்துவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்‍கு கடந்த 7ம் ‍தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி முன்னிலை பெற்று வருகிறது. அக்‍கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான திரு. சந்திரசேகர ராவ், கஜ்வல் தொகுதியில் 50 ஆயிரம் வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை முடிவுகள் அறிவிக்‍கப்பட்ட 20 தொகுதிகளில், 17 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியும், 3 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து, ஹைதராபாத்தில் ராஷ்ட்ர சமிதி கட்சி அலுவலக வளாகத்தில், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00