முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது - சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

Nov 14 2018 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

டிஜிட்டல் உலகில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றிருப்பதாக சிங்கப்பூர் மாநாட்டில் பேசிய பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்‍காசிய மாநாடு சிங்கப்பூரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டையொட்டி நடைபெற்ற ஃபின்டெக் எனப்படும் நிதிசார் தொழில்நுட்ப விழாவில் பிரதமர் மோடி‍ பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.

இந்தியாவில் தற்போது, தொழில்நுட்ப புரட்சி நடந்துவருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் டிஜிட்டல் மயமாகி இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக டிஜிட்டல் அடிப்படையிலான ஆதார் அடையாள அட்டை 120 கோடி பேருக்‍கும் அதிகமாக கிடைத்திருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். Rupay, BHIM போன்றவை மூலம் வங்கிகளில் பணமில்லா பரிவர்த்தனை துரித வளர்ச்சி கண்டிருப்பதாக அப்போது தெரிவித்தார்.

இப்பயணத்தின் அடுத்தகட்டமாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இருநாடுகளிடையேயான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதேபோல், சிங்கப்பூரில் வசிக்‍கும் இந்தியர்களை திரு. மோடி சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00