மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார் - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது

Nov 12 2018 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமைச்சர் அனந்தகுமார், உடல்நலக்‍குறைவால் மரணமடைந்தார். அவருக்‍கு வயது 59.

மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்‍கு, அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் அமெரிக்கா சென்று மேல் சிகிச்சை பெற்று, உடல்நிலை சீரான நிலையில் நாடு திரும்பினார்.

மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 20-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிக்‍சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்‍கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பெங்களூரு​தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அனந்த குமார் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00