மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கை நோக்‍கம் நிறைவேறவில்லை - ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் மூலம் அம்பலம்

Nov 9 2018 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், மக்களிடம் பணப்புழக்கத்தை குறைப்பதற்காகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பு 17.90 லட்சம் கோடியாக இருந்ததாகவும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு 19.60 லட்சம் கோடியாக இருந்ததாகவும், அதன்படி 9.5 சதவீதம் உயர்வை அடைந்திருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2.54 லட்சம் கோடி ரூபாயை பொதுமக்‍கள் ஏ.டி.எம்.கள் மூலம் எடுத்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.75 லட்சம் கோடி ரூபாய் ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது 8 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ​தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 1.13 லட்சம் கோடியாக இருந்த செல்போன் பணப்பரிமாற்றம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00