மத்திய அரசின் எல்லா கருத்துகளையும் ஏற்கவேண்டிய அவசியம் ரிசர்வ் வங்கிக்‍கு இல்லை - அறிவார்ந்த சிந்தனையுடன் வங்கி நிர்வாகம் செயல்பட வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் வலியுறுத்தல்

Nov 7 2018 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் எல்லா கருத்துகளையும் ஏற்கவேண்டிய அவசியம் ரிசர்வ் வங்கிக்‍கு இல்லை என அதன் முன்னாள் கவர்னர் திரு. ரகுராம்ராஜன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்‍கிய பிரமுகர்கள் வங்கியில் பெற்ற வாராக்‍கடன் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்‍கும், மத்திய அரசுக்‍கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்நர், இருதரப்பினரும் அவரவர் கருத்துகளை ஏற்கவேண்டும் என கூறினார். மத்திய அரசுக்‍கு பொதுவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்‍க வேண்டிய சிந்தனை இருக்‍கும் - அதேநேரம் நிதிச்சந்தையை வலுவாக வைத்திருக்‍க வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்‍கு இருப்பதால், மத்திய அரசின் கருத்தை ரிசர்வ் வங்கி எப்போதுமே ஏற்கவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மத்திய அரசு கார் ஓட்டுநர் என்றால், ரிசர்வ் வங்கி அவரை பாதுகாக்‍கும் பெல்ட் போன்றது என்றும் குறிப்பிட்டார். இந்திய கிரிக்‍கெட் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பொறுமையாக இருந்து அணியின் வீழ்ச்சியை தடுப்பதுபோல், ரிசர்வ் வங்கி செயல்படவேண்டும் என்றும், நவ்ஜுத் சித்துபோல் அதிரடி காட்டக்‍கூடாது என்றும் திரு. ரகுராம்ராஜன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00