அயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை

Nov 7 2018 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி பண்டிகையையொட்டி, அயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றிய நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் மூன்று நாட்கள் தீப உற்சவம் நேற்று நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்றிரவு அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் 3 லட்சத்து ஓராயிரத்து 152 அகல் விளக்குகளை ஏற்றி உற்சாகமாக தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், அம்மாநில ஆளுநர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தீப உற்சவத்தில் கலந்துகொண்டனர்.

இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் 3 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்ட சாதனை நிகழ்வை, அங்கீகரிக்கும் சான்றிதழை முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கினர். தீப உற்சவத்தை முன்னிட்டு லேசர் ஒளிக்காட்சிகளும் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதனிடையே தீபாவளியை முன்னிட்டு, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில், காளிகோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இங்கு ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து வழிபட்டனர்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள காளி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தீபங்களேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00