நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் எதிரொலி - தொடர்ந்து இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை

Nov 5 2018 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு இந்த நடவடிக்‍கைகளை மேற்​கொண்டிருப்பதாக வாடிக்‍கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் பெட்ரோல் லிட்டருக்‍கு அதிகபட்சமாக 89 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் டீசல் விலையும் 80 ரூபாயை தாண்டியது. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வதால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்‍கு முன் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, திடீரென ​பெட்ரோல், டீசல் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பா.ஜ.க. அரசின் இந்த சுயநலப்போக்‍கை பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், மீண்டும் விலையேறத் தொடங்கியது. இந்தநிலையில், கடந்த 10 நாட்களுக்‍கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்‍கு சுமார் 82 ரூபாயாகவும், டீசல் விலை 77 ரூபாயாகவும் உள்ளது. மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்‍கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டே இந்த விலை வீழ்ச்சி என பொதுமக்‍கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் மக்‍கள் விரோத செயல் அம்பலமாகிவிட்டதாக அரசியல் நோக்‍கர்கள் தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00