இரட்டை கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை - அரியானா நீதிமன்றம் உத்தரவு

Oct 16 2018 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரட்டை கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமியார் ராம்பால். டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவரது மனைவியை ஆசிரமத்தில், அடைத்து வைத்து பின்னர் கொன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரியாணா போலீஸில் புகார் அளித்தார்.

இதேபோன்று உத்தரபிரதேசத்தின் லலித்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ராம்பால் மீது புகார் கூறியிருந்தார். இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, ராம்பாலை கைது செய்ய போலீஸார் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 6 பேர் இறந்தனர்.

இதனிடையே, 4 ஆண்டுகளாக நடந்து வந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்குகளில் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என்று அரியானாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராம்பால் மீதான தண்டனையை இன்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00